"மூணாறில் சில நேரம் காட்டு யானை நம்ம வழி மறிச்சு நிக்கும். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். இப்போ சீசன் டைம். மூணாறுக்கு போகலாம், கிளம்பு" னு என்னவர் சொன்னார். சரி, நானும் எத்தன நாள் தான் யானைய கோயில்லயும் டிவி-லயுமே பாக்கறது? காட்டு யானைய நேர்ல பாக்கற சான்ஸ் கிடைச்சா நல்லது தான்-னு நினைச்சுட்டே உற்சாகமா கிளம்பிட்டேன். எங்களை தலைபொங்கலுக்கு ஊருக்கு கூட்டிட்டு போக திருச்சூர் வந்து இருந்த என் அண்ணாவையும் கிளப்பி மூணாறுக்கு பயணப்பட்டோம்.
நல்ல இருட்டினப்புறம் தான் மூணாறு ரீச் ஆனோம். குளிருக்கு உடம்புல இருக்கற அத்தன பார்ட்ஸ்-ம் உதறுது. நாங்க புக் பண்ணி இருந்த 2-ரூம் காட்டேஜ்க்கு போயி நல்லா இழுத்து போர்த்திகிட்டு தூங்கிட்டோம். காலைல எழுந்து வெளிய பாத்தா - காட்டுக்கு நடுவுல இருக்கு எங்க காட்டேஜ்! சுத்தி உயரமா விதவிதமான மரங்கள். விதவிதமான பறவைகளோட கீச்-கீச் ரீங்காரம்; கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா ஏதோ சின்ன பிள்ளைங்க பேசற மழலை மாறியே இருந்தது!
 |
| நாங்கள் தங்கியிருந்த காட்டேஜ் |
நாங்க அரேன்ஞ் பண்ணியிருந்த டாக்ஸி வந்ததும், முதல்ல நல்ல ஹோட்டல்-ல பிரேக்-பாஸ்ட் முடிச்சோம். அப்புறம் ஊரு சுத்த ஆரம்பிச்சோம். முதல்ல, ஒரு டீ எஸ்டேட் பக்கத்துல நிறுத்தி ஒரு சின்ன போட்டோ சூட் பண்ணோம். நான் தான் மாடல்; என் அண்ணாவும் என்னவரும் மாறி மாறி போஸ் பண்ண சொல்லி போட்டோவா எடுத்து தள்ளினாங்க.
 |
| டீ எஸ்டேட் நடுவில் நான் |
அடுத்த ஸ்டாப்ல நம்மள டீ எஸ்டேட்-ல வேலை பாக்கறவங்க மாறியே தலைல ஸ்கார்ப் கட்டி விட்டு, தேயிலை பறிச்சு போடற கூடைய தலைல மாட்டி விட்டு போட்டோ எடுத்து தராங்க. என்னவருக்கு இதை கேட்டதும் என்னை தேயிலை பறிக்கற கெட்டப்-ல போட்டோ எடுத்துக்கணும் ஆசை. பாசக்கார புருஷன் ஆசைய நிறைவேத்தினேன்.
 |
தேயிலை தோட்டக்காரி
அடுத்து எலிபண்ட் பார்க். ஒரே ஹைட் அண்ட் சைஸ்-ல 6 யானை இருக்கு இங்க. பாக்கவே அவ்ளோ அழகா இருந்தது யானை எல்லாம். யானை அழகை மட்டுமே பாத்தா போதுமா? யானை சவாரி போனோம்.
|
 |
நானும் என்னவரும் யானை சவாரியில்
|
யானை சவாரி ஒரு 15 நிமிஷம் தான். யானை நடக்கும் போது நாமளும் குலுங்கி குலுங்கி போறோம். ரொம்ப நல்லா இருந்தது.
அடுத்தது மாட்டுப்பட்டி போட் ஹவுஸ். லைப் ஜாக்கெட் எல்லாம் போட்டுகிட்டு போட் ஏறினோம். மாட்டுப்பட்டி லேக்-கை சுத்தி பெரிய பெரிய யூகலிப்டஸ் மரங்கள். நேச்சுரல் ப்யூட்டிக்கு நிகர் எதுவும் இல்ல போங்க! நான் இப்படி ரசிச்சுட்டு இருந்தப்போ, அது வரை சீரான வேகத்துல போயிட்டு இருந்த போட்-ஐ ஒரு சுழட்டு சுழட்டி எட்டு போட வெச்சாரே எங்க போட் டிரைவர் - அலறிட்டேன் நான்! இந்த மாறி எட்டு போடறது போட் ஹவுஸ் ஸ்பெஷாலிட்டி-யாம்! "போட்-ல கோடு போட்ட மாறி நேரா போறதுல என்ன இருக்கு? இப்படி எட்டு, பத்து-ன்னு போட்டா தான் த்ரில்" னு அப்புறமா நினைச்சுகிட்டேன்.
போட் டிரைவரை எங்களை போட்டோ எடுக்க சொன்னப்போ அவர் போட்-ஐ 360 டிகிரி மெதுவா சுத்த விட்டு எங்களை க்ளிக்கி தள்ளினார். என்ன ஒரு ஐடியா!
 |
| 360 டிகிரி போட்-ஐ சுத்த விட்டு எடுத்த ஒரு போட்டோ |
லாஸ்ட்-ஆ பாத்தது குண்டல டாம்.காலாற நடக்க ஏத்த இடம். மணி அஞ்சரை ஆனதுமே குளிரு பின்னி எடுக்குது. நாங்க பலூன் சுட்டு விளையாடிட்டு, சூடா ஒரு டீ சாப்ட்டு காட்டேஜ்க்கு போய்ட்டோம்.
 |
| பலூன் சுட்ட பிறகு |
சில தகவல்கள்
- சாப்பாடு - ஹோட்டல் சரவண பவன்-ல தான் பெஸ்ட் சாப்பாடு (சைவ உணவு மட்டுமே)
- எலிபண்ட் பார்க் - ரூ.250 க்கு நாம யானை சவாரி செய்யறத போட்டோ வீடியோ போட்டு தராங்க. யானை சவாரி-க்கு சார்ஜஸ் தனி. என்ன கேட்டா நாமளே நம்ம கேமரா-ல போட்டோ எடுத்துக்கறது பெஸ்ட்.
- ஷாப்பிங் - தேயிலை, ஹோம்-மேட் சாக்லேட் எல்லாம் மெயின் டவுன்-ல வாங்கலாம். எக்கோ பாயிண்ட்-ல இருக்கற கடைகள்-ல ஹாண்ட்பாக், கீ-செயின், ஹாண்டிகிராப்ட் ஐடெம்ஸ் வாங்கலாம்.
- டீ பாக்டரி - டீ பாக்டரி டூர்-ஐ மிஸ் பண்ணாதீங்க.
- மொபைல் போன் - BSNL தான் அங்க ஸ்ட்ராங் நெட்வொர்க். மத்த நெட்வொர்க் எல்லாம் மெயின் டவுன்-ல மட்டும் தான் சிக்னல் கிடைக்குது. மெயின் டவுன்ல இருக்கும் போதே போன் கால்ஸ் எல்லாம் பண்ணிடுங்க. முக்கியமா அம்மா அப்பாக்கு சொல்லிடுங்க நீங்க பத்திரமா இருக்கீங்க-ன்னு. (என் அம்மா அப்பா எங்களை காண்டாக்ட் பண்ண முடியாம பயந்துட்டாங்க.)
கொஞ்சம் விசாரிச்சதில, BRHolidays (brholidays@yahoo.com) கொஞ்சம் டிபரெண்டா சில விஷயங்கள் பண்றாங்க.
- நமக்கு வேணும்னா காட்டேஜ்-ல நமக்கு சமைச்சு போட ஒரு குக் அரேன்ஜ் பண்றாங்க.
- ராத்திரி கேம்ப்-பயர் போட்டு, அதுல நமக்கு விருப்பமான பிராணியை கிரில் பண்ணி தராங்க.
- டாக்ஸி-ல போக போர் அடிச்சா, ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு நீங்க போகலாம்.
- தேயிலை பறிக்கற டைம்-ல மூணாறு போனீங்கன்னா, நீங்க தேயிலை பறிக்கறவங்க கூட சேர்ந்து தேயிலை பறிக்கலாம்.